வியாழன், 26 செப்டம்பர், 2013

வண்டிச்சக்கரமும் மரபுவழி தொழில்நுட்பமும்

வெள் உவன், ஆய்வாளர், திருநெல்வேலி.



 
சக்கரம் மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் சக்கரத்தின் கண்டுபிடிப்பு ஒரு நாவலை உண்டாக்கி இருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் மண்பாண்டங்களை வனைய கற்றுக் கொண்டான். மண்பாண்டங்களின் உருவாக்கம் மனித நாகரிக வளர்ச்சியில் ஒரு மைல்கல். அதுபோலவே சக்கரங்களை பயன்படுத்தி வண்டியை உருவாக்கியதும் சிந்துவெளி நாகரிக காலத்திலேயே வண்டியின் பயன்பாடு இருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதுபோலவே மட்பாண்டங்களின் பயன்பாடும் பொருநைக் கரை (ஆதிச்சநல்லூர்) நாகரிக காலத்திலேயே சிறந்து விளங்கியது என்பதை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. சக்கரம் என்று வந்துவிட்டாலே அதற்கான நுண் கணக்கியலும் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிடுகிறது. சக்கரம் என்று எடுத்துக் கொண்டால் அதன் விட்டம், மையம், சுற்றளவு போன்ற அளவுகள் பற்றிய அறிவு தேவைப்படுகின்றன. பொதுவாக இன்று நமக்குக் கணக்கியலில் சக்கரத்தின் சுற்றளவை கண்டறிய µ D என்ற சூத்திரத்தைப் பயன்படுத்துகிறோம். இது மேற்கத்திய கல்வி முறையின் வழியே நமக்கு அறிமுகமான அறிவு. ஆனால், இந்தக் கல்வி முறை நமக்கு அறிமுகமாகும் முன்பே வட்டத்தின் சுற்றளவு வட்டத்தின் பரப்பளவு போன்வற்றை கண்டறிய நமது மரபில் எளிய முறைகள் இருந்து வந்திருக்கின்றன. ஆனால், காலப்போக்கில் அவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ளாமல் மறந்துவிட்டோம். அப்படி மறந்து போனதின் விளைவாக அவையெல்லாம் மறைந்தும் போயின. நல்லவேளை அவையெல்லாம் முற்றிலும் அழிந்து விடவில்லை. நமது பழங்குறிப்புகளில் அவை எல்லாம் புதைந்து கிடக்கின்றன. இதில் வேடிக்கை என்ன வென்றால் இன்று நாம் மேற்கத்திய முறையில் கற்கும் சூத்திரங்களுக்கு மூலம் நமது பழங்குறிப்புகள்தான் என்பதுவே வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்க நமது பழங்குறிப்பில் காணும் சூத்திரம்
“விட்டம் ஓர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டிப்பு செய்தால்
திகைப்படும் சுற்று தானே”
அதாவது வட்டத்தின் விட்டத்தை ஏழு பங்குகளாக்கி அதனுடன் நான்கு பங்குகளை சேர்த்து
அதை இரண்டால் பெருக்க வட்டத்தின்  சுற்றளவு கிடைக்கும் என்பது இதன்பொருள்.    இந்தச்    சூத்திரத்தைப்    பயன்படுத்தி    ஒரு    வட்டத்தின்    சுற்றளவை கண்டு பிடிப் போம். எடுத்துக்காட்டாக ஒரு மாட்டுவண்டி (சக்கடா வண்டி) சக்கரத்தின் விட்டத்தை எடுத்துக் கொள்வோம். சக்கடாவண்டிச் சக்கரத்தின் உயரம் அதாவது விட்டம் 51/4 அடி.
இந்த அளவு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒரிசா வரை காணப்படுகிற வண்டி களின் சக்கரங்கள் அனைத்தும் இதே அளவில் தான் செய்யப்படுகின்றன என்பது சற்று ஆச்சரியம் தரக்கூடிய தகவல்தான்.
     ஏன் இப்படி ஒரு தரப்படுத்தப் பட்ட அளவை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பின்னால் பார்ப்போம். இப் போது நமக்குத் தெரிந்தச் சூத்திரங் களைப் பயன்படுத்தி வண்டிச் சக்கரத் தின் சுற்ற ளவைக் காண்போம்.
முதலில் நமது மரபுவழி சூத்திரத்தைப் பயன்படுத்தி ஐந்தேகால் அடி விட்டம் கொண்ட சக்கரத்தின்  சுற்றளவு 51/4 அடிகளை ஏழு சமபங்காக்கினால் ஒரு பங்கின் மதிப்பு 3/4 அடியாகும். இன்னும் ஒரு நான்கு பங்கின் பதிப்பு 4x3/4=3 ஏழு பங்கின் மதிப்பான ஐந்தேகால் அடியுடன் நான்கு பங்கின் மதிப்பு 3ஐ கூட்டினால் (51/4+3=81/4x2) = 161/2 அடியாகும். நமது மரபுவழி சூத்திரத்தை பயன்படுத்தி கண்டறிந்த வண்டிச் சக்கரத்தின்  சுற்றளவு 161/2 அடியாகும். இப்போது µயைப் பயன்படுத்தி சுற்றளவைக் காண்போம். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட µ யின் மதிப்பு 3.1415 ஆகும். வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்க நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட சூத்திரம் µ D. இதன்படி 3.1415x31/4=16.492875  ஆகும். நமது மரபு வழி சூத்திரத்தைப் பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பு 16.5(101/2) பள்ளியில் படித்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பு 16.4985 ஆகும். நமது மரபுவழி சூத்திரத்தின் அடிப்படையில் கண்டறிந்த மதிப்பு துல்லியமானது. பள்ளிப் படிப்பு  சூத்திரத்தில் 0.0007125 அளவிலான மதிப்பு விடுபட்டுப் போயிருக்கிறது. நமது மரபுவழி சூத்திரத்தில் 22 மற்றும் 7 என்ற எண்களுக்குத் தொடர்பிருக்கிறது. (7+4x2-32)  இதன்படி நமது மரபு வழி சூத்திரத்தின் அடிப்படையில் தான் µ ன் மதிப்பாக 22/7 என்றுகொண்டார்கள் என்ற முடிவுக்கு நம்மால் வர முடிகிறது. ஒரு வட்டத்தின் சுற்றளவு என்பது அதன் விட்டத்தைப் போல மூன்று மடங்கும் ஒரு சிறு பகுதியும் ஆகும். அந்தச் சிறு பகுதி என்பது விட்டத்தின் மதிப்பில் ஏழில் ஒன்றாகும். இந்த உண்மையைக் கண்டறிந்த நமது முன்னோர்கள் இதன் அடிப்படையிலேயேதான் நமது மரபுவழிச் சூத்திரத்தை உருவாக்கினர்.
நம்மிடம் புழக்கத்தில் இருந்த பின்ன முறை மேற்கத்தியர் அறியாத ஒன்று. அவர்களுக்கு அரை, கால் என்பதை மட்டுமே சுட்ட தனிச் சொற்கள் உண்டு. மற்ற பின்ன எண்களையெல்லாம் இத்தனையின்கீழ் இத்தனை என்றே குறிப்பிட்டனர். நம்மிடமோ கால், அரை, முக்கால், அரைக்கால், மாகாணி என்று ஒவ்வொரு பின்ன எண்ணையும் குறிக்க தனிச் சொல் உண்டு 1/320 என்ற  பின்ன எண்ணைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் முந்திரி என்பதாகும். இந்த 1/320 எண்ணை மேலும் 320 பங்குகளாக பகுக்க வரும் எண் கீழ்முந்திரியாகும். அதன் எண் வடிவம் 10102400 என்பதாகும். இப்படி நுண்ணிய மதிப்பு கொண்ட எண்கள் நம்மிடையே புழக்கத்தில் இருந்ததால் நமது மரபு வழியில் துல்லியமாக எதையும் கணக்கிட முடிந்தது. எனவே, µ யைப் பயன்படுத்தும்போது நமது மரபு வழியில் கண்டறியும் துல்லியம் கிடைப்பதில்லை.
மாட்டுவண்டி என்பது மனிதனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வருகிற ஒரு வாகனம். மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டு பயன் படுத்திய முதல் வாகனமும் இதுதான் என்று கூடச் சொல்லலாம். நமது முன்னோர்கள் வடிவமைத்திருக்கும் இந்த மாட்டு வண்டி யின் தொழில்நுட்பம் நம்மை சற்று கூடுதலாகவே ஆச்சரியப்பட வைக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் பயன் படுத்தப்படும் சக்கடா வண்டி என்னும் பாரவண்டியை எடுத்துக் கொண்டால் அதன் வடிவமைப்பு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப் படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது என்கிற தகவல் சற்று யோசிக்க வைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்தப் பகுதிகளில் பயன்படுத்தப் படும் மாட்டு வண்டிகளின் சக்கரத்தின் உயரம் 51/4 என்று தரப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன் என்று சற்று பார்ப்போம். பொதுவாக ஒரு நபரை நெட்டையான ஆள் என்றோ குட்டையான ஆள் என்றோ அடையாளப் படுத்துவது நம்மிடையே இருந்துவரும் ஒரு பழக்கம். இந்தக் குட்டை நெட்டைக்கான அடிப்படை என்று ஒன்று இருக்க வேண்டும் தானே. அதாவது சராசரி உயரம் என்பதாக நம்மை பொருத்தவரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 51/2 அடி என்பதாகும். இந்த சராசரி உயரத்தின் 3/4 பங்கு என்பது அதாவது எண் சாண் உடம்பு  என்று சொல்வோமே அதில் 3/4 பங்கான 6 சாண் என்பது 41/8 (நாலரை அரைக்கால்) அடி ஆகும். இது மனிதனின் நெஞ்சுப் பகுதி வரை உள்ள உயரமாகும். மாட்டுவண்டியின் நீளமான பகுதி ‘போல்’ என்பதாகும். இதன் முனையில் தான் மாடுகளைப் பூட்ட பயன்படும் நுகத்தடியைப் பொருத்திக் காட்டுவார்கள். 51/4 அடி வண்டி சக்கரத்தின் ஆரம் 23/8 (இரண்டே அரையே அரைக்கால்) அடி சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல்தான் பாரம் தாங்கியாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல்தான் போல் என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப் பட்டிருக்கும். இந்தப் போலும் தெப்பக்கட்டையும் சேர்ந்து ஒன்றரை அடி உயரம் இருக்கும்.
ஆக ஒரு வண்டியைப் படுக்கை மட்டத்தில் சமன் பண்ணினால் வண்டியின் உயரம் 41/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (25/8+11-/2) சேர்ந்து உயரம் 41/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 41/8 அடி இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி நுட்பமாக வடிவமைக்கப் பட்டுள்ள மாட்டுவண்டியை 41/8 அடி உயரத்தில் விரல் தொடலில் சமன் செய்ய முடியும். இந்த அமைப்பில் வடிவமைக்கப்பட்ட வண்டியின் பாரம் மாட்டின் கழுத்தை தாக்காது. எனவே, மாட்டை வண்டியின் பாரம் தாக்காத  விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியைச் செலவழித்தால் போதும் மாட்டினை பெரிய அளவில் பாரம் தாக்காத விதத்தில் வடிவமைக்கப்பட்ட நமது மரபுவழி வண்டியின் தொழில் நுட்பத்தின் தன்மையைப் புரிந்து கொள்கையில் நமது முன்னோர்களின் அறிவுத் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். அந்த வரையறையில் சில:


வண்டியின் பாகம்           பயன்படுத்தப்பட வேண்டிய மரவகை

சட்டம்                     வாகை மரம்
குறியது                    வாகை மரம்
ஆரக்கால்                  உன்னி
அலகு                      தேக்கு
குடம்                      வைமரம்
தெப்பக்கட்டை             வேங்கை
போல்                     பாலோடி (அ) வேங்கை
நுகம்                      கொன்றை (அ) மஞ்சணத்தி (அ)  புன்னை          
நோக்காகுச்சி               வைமரம்
தாங்குக்கட்டை             வைமரம்
பிள்ளைச்சட்டம்            வாகை
குரங்குகம்பு                கல்மூங்கில்
ஊனிகம்பு                  விடைத்தலை
அளி                       மூங்கில்பட்டியல்

வண்டிச் சக்கரத்தின் விட்டம் எல்லாப் பகுதியிலும் ஒரே அளவில் தரப்படுத்தப் பட்டிருப்பது நமக்கு வேறு ஒரு சிந்தனையைத் தருகிறது. இன்று தூரத்தை அளக்க கிலோமீட்டர் என்ற அளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த முறை நம் நாட்டில் 1957இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டு அமலுக்கு வந்தது. அதற்கு முன் மைல் என்ற அளவு நடை முறையில் இருந்தது. இந்த அளவு முறை வெள்ளையர்களால்தான் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், நமது வண்டிச் சக்கரத்தின் சுற்றளவான 161/2 அடி என்பது வேறு ஒரு செய்தியைச் சொல்வதாகத் தெரிகிறது. மைல் என்பது 8 பர்லாங்க் ஆகும். 1 பர்லாங்க் என்பது 200 கஜம் அல்லது 660 அடி ஆகும். அப்படியெனில் 1 மைல் என்பது 5280 அடிகளாகும். வண்டிச்சக்கரம் ஒரு முறை சுற்றினால் கடக்கும் தூரம் 161/2 அடியாகும். இப்படி 320 முறை வண்டிச்சக்கரம் சுழன்றால் அது கடக்கும் தூரம் 5280 அடியாகும் (16,5x320=5280). இதை இப்படியும் சொல்லலாம். அதாவது ஒரு முறை சுற்றும்போது அது கடக்கும் தூரம் 1/320 மைல் ஆகும். நமது பின்ன எண்ணில் 1/320 என்பது ஒரு முக்கியமான எண் ஆகும்.

எனவே, மைலின் நீளத்தின் அடிப்படை யிலேயே வண்டிச் சக்கரத்தின் சுற்றளவை அமைத்தி ருக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் மூலம் மைல் என்ற அளவின் மூலக்கரு மேல் நாடுகளுக்குப் போய் அங்கிருந்து மைல் என்ற பெயரில் மறுபடியும் இங்கு அறிமுகமாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மாட்டு வண்டி யின் சக்கரத்தை உருவாக்கும்போது நமது முன்னோர் கள் எவ்வளவு நுட்பமாகப் பலவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போதும் நம்மவர்களின் மதிநுட்பத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

பகிர்வு



முனுசாமிப் பேரன், பதுவஞ்சேரி, சென்னை.

கலை இலக்கியங்கிறதே பூடகமாகத்தானே சொல்ல வேண்டியிருக்கு என்றார் வெளிப்படையாக.
“....ஆமா... மௌனமா பேசினா அது வெறும் செய்தியா போகும்” என்றார் அழுத்தி.
“இதுவர, ஆறு டீ... பன்னென்டு கீர வட”
“எவ்ளோ... அ.... சொல்லுங்க... எவ்ளோ பாஸ்...”
“தோலுவாய(ன்) போனானா(ம்) தொன்னவாய(ன்) மூட்டப் பொண்ண கேக்க”
மொத்தம் நூத்திஎட்டு என்றார், டீ கடைக்காரர்.
---------
 “மார்க்ஸ்... ஸ்டாலின்  வாசிங்க”
“சரி”
“லியோ டால்ஸ்டாய்... கார்க்கி வாசிங்க”
“சரி”
“பிக்காசோ... வான்கா வாசிங்க”
“சரி”
“டே ய் நீ என்னடா எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டுற!
உங்க ஆத்தா உன்னய பெத்தாளா பேண்டாளாடா!”
“இல்ல மச்சி என்னய பீசிட்டா...டா”
------------
படம் 1 : தோழா என் பின்னே வருகிறவர்கள்... என்னைக் காட்டிலும் பெரிய
   காரியங்களைச்  செய்வார்கள்
படம் 2 : இல்ல தோழா! அப்படி யாரும் வந்த மாதிரி தெரியலியே
படம் 1 : சரி தோழா, “அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை”
(படங்களை நோக்கி இருவர் கோட் சூட் போட்டு வருகிறார்கள்)
ஒருவர் : “இதுக்கு ஒரு லட்சம். அதுக்கு ஒரு பத்தாயிரம்... இதுக்கு மேலே வாங்கித்
                 தர முடியாது”
படம் 1& 2 : ஆமா தோழா! நாம புத்தர் படமா இருந்தா அதிக வெலக்கி  போயிருப்போம்.
---------
மைய அரசியல், நுண் அரசியல் என்று பேசி பேசி தேநீர் இழுத்தார். அவரிடம் காலையிலிருந்து பூமி பார்த்தீர்களா? என்றேன். குறிப்பாக இந்தத் திராவிட கட்சிகளால்தான் தமிழினமே வீழ்ந்தது என்று தேநீர் முடித்தார். மீண்டும் அவரிடம் சரி வானம் பார்த்தீர்களா? என்றேன். பதில் சொல்லாததனால்... நான் சிறுவர்கள் விளையாடும் கோலியாட்டத்தைப்


பார்த்தேன். ஒரு கால் முட்டியின் மேல் மறுகால் அழுத்தி... முகத்தில் மூக்கு புடைக்க மையம் குவித்து எதிரே இருபதடி தூரத்திலுள்ள மற்றொரு கோலிகுண்டை லொட்டக் கையன் சரவணன் அடித்தான். குறி பார்த்து அடித்த அந்த அடியில் இருக்கிறது நுண் அரசியல்.
--------
குரு : பூவைப் பார்த்தாலும்... நாயைப் பார்த்தாலும்... மகிழ்ச்சி உண்டாகும்...          
         பொழுது சொல்கிறது
சீடர் : அப்புடியா
குரு : ஆனால்  விருது, விளம்பரம், வியாபாரம்... இவைதான் தீர்மானிக்கிறது!!!!!!           
        இது படைப்பு... இவர் படைப்பாளர்.
சீடர் : யாடியுப்அ!
----------
சில நாட்களில் மரம் முழுக்க வெள்ளைப் பூக்களால் நிறைந்திருக்கும். நெளியாமல் தொங்கும் பச்சை மண் புழு போல பூக்களில் சில குட்டிப் பிஞ்சுகள் துளிர்க்கும். அந்த முருகமரத்துப் பூவில் தேன் குடிக்கும் தேன்சிட்டு! கிளையில் இலையில் உட்காராமல் படபடத்துப் பறந்துகொண்டே ஒரு நொடிப் பொழுதில் பறக்காமல் அந்தரத்தில் மிதந்து தேன் இழுக்கும்... நான்கு பேர் சேர்ந்து பிடிக்கும் அடர்ந்த உயரமான வேப்ப மரம். அதில் சண்டை போட்டுக்கொண்ட காகங்கள் இரண்டு. கடித்து அடித்து கடித்துக் கொண்டே பனம்பழம் போல கீழே விழப் பார்த்து! பூமிக்கு இரண்டடி, மூன்றடி உயரத்தில் ஒரு நொடிப் பொழுதில் பிரிந்து!  படபடத்துப் பறந்து செல்லும்... எதிர்பாராத விதமாய் ‘டமார்’ என சத்தம். இரண்டு வண்டிகள் மோதி பெரும் விபத்து. அருகே செல்வதற்கு முன் ஆம்புலன்ஸ் தூக்கிக்கொண்டு போனது. அந்தச் சப்தத்தின் படபடப்பு ஆணா, பெண்ணா? மதம் சாதி? யாவும் மறந்து உள்ளுக்குள் சிறு நடுக்கத்துடன் அந்தப் படபடப்பு. பறக்காமல் மிதந்த தேன்சிட்டின் படபடப்பு. பிரிந்து பறந்த காக்கையின் படபடப்பு. முகமறியாத நபர் மேல் கொண்ட படபடப்பு. இவையெல்லாம் ஒன்றா வேறா?
---------

அரூபம் (எழுத்து/ ஓவியம்)
நாளகனெனள
ய்ணளடிஅர்
பேஓஊடீ
ய்ஊஆறு
ஓநுளுதுனு
ய்ட்டுஆளுனு
டடாடாடுடூடை
அரூபம் நன்றாக விளங்கியது.

“மனித உறவுகளை நேசிக்கிறதும்.
நேசித்த உறவுகளைச் செழுமைப்படுத்திக் கொள்வதும்... அப்படி!
செழுமைப் படுத்திக்கொண்ட உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வதுமே
மானுடப்பண்பு”
“யப்பா அத விடு..
தர்மபுரி இளவரசன் செத்தது,
கொலையா? தற்கொலையா?”

கேளுங்கள் தரப்படும்

சந்ரு, அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வர் (ஓய்வு), எழும்பூர்



கலை என்றால் என்ன?
பல பொருள் தரும் ஒரு சொல். இளம் பருவம் (வேட்டை பழகுதல்) விளையாட்டு, வாலிபம் -  விளையாட்டு, வேட்டையும் விளையாட்டும் ஒன்று கலந்த அனுபவம் கலை. கலை ஓர் அனுபவம். பயிற்சி வாயிலான வெளிப்பாடு கலை படைப்பு.
மானுட வாழ்வில் கலையின் பங்கு?
பகிர்தல் வாழ்வின் யதார்த்தம். தனிநபர், சமூகம் என்பதில் நேரும் மன இறுக்கத்தின் நீட்சியாக வெளி, கடவுள், கலை, காதல் போன்ற நல்ல தன்மைகள் உருக்கொள்கின்றன.
யாவரும் சொல்பவர், கேட்பவர் என்ற இருவேறு நிலைக்கு உரியவர். இக்கலையின் பேரால் தன் அனுபவத்தை சொல்லும் நிலையில் கலைஞனும் கேட்கும் நிலையில் சமூகமும் சுட்டிக்காட்டப் படுகிறார்கள். தகவல் பதிவு, அனுபவ பகிர்வு என்பதை மானுட வாழ்வில் கலையின் பங்கு பணியாக குறிப்பிடலாம்.
யார் கலைஞன்? அதன் நீட்சியாக யார் கலைஞன் இல்லை?
தனிப் பயணிக்கு பாட்டு துணை. மரண பயம், விந்தை உணர்வு குறித்த விசாரிப்பில் நெகிழ்ந்து அகமகிழ்ந்த பொழுதாய் உறவுகளை தழுவி நிற்பவன் கலைஞன். இவ்விசாரிப்பில் குழப்பமுற்று, வன்மத்துடன் பிறர்பால் அதிகாரம் எழுதுவது கலைஞனுக்குப் புறம்பானது.(நம் சமூகத்தில் ஏன் அங்கும், தன்னில் பரந்துபட்ட மனோநிலையை உணரும் இடத்தில் தன்னை கலைஞனாக பாவிக்கிறார்)

இக்குழுவினர் ஓவியங்களில் உருவத் தோற்றங்கள் பொது பண்பு  கொள்கின்றன. இதுவே இக்குழு ஒருங்கிணையக் காரணமா? (அ) வேறு படைப்பியல் உந்துதலா-?
கலைத்துறையினர் சாமி வகையறா, ஆண், பெண் அழகு வகையறா, குதிரை, கரப்பான் வகையறாக்களும் உருவத் தோற்றங்களை பொதுவாக கொண்டவை எனினும் அத்தகைய படைப்பாளி, படைப்புகள் இக்குழுவில் இல்லை.
ஓவியத்திலுள்ள உருவத் தோற்றங்களுக்கு பின்னால் படைப்பாளி நிற்கிறான். ஓவியம் குறித்த ஆய்வுகள் படைப்பாளி, ஆளுமை, சமூகம் எனப் பரந்து விரிந்தவை. இதில் சுயம், சமூகம் சார்ந்த விசாரிப்பு, விமர்சனங்களை  பிரதிபலிக்கும் உருவத் தோற்றங்களை பொதுப் பண்பாக இக்குழுவின் ஓவியங்கள் பெற்றுள்ளன எனலாம். மேலும், இக்குழு
நடப்பிலுள்ள பரவலான கருத்தியல், ஊடக பண்புகளையும் கடந்து செல்லும் முனைவு கொண்டது எனலாம்.
ஏன் அரூப ஓவியர்கள் இக்குழுவில் இல்லை?
மௌனம் மகான்களுக்கு அழகு. வாய்ப் பேச்சில் அறியவரும் நபர் மகானா? பைத்தியமா? என்று... அரூபம் என்ற சொல்லுக்கு உணர்வு மயம், காட்சித் தோற்றம் அற்ற,புரிந்துணர்வு என பல அருத்தம் கொள்ளலாம்
காட்சித் தோற்றங்களைக் கொண்டது ஓவியம். இதில் அரூபம் என்பது உருவ, வடிவ தோற்றங்களால் உணர்த்தப்படுவது. கரு, உரு என ஓவியங்கள் பல வகை வளர்ச்சி மற்றும் ஆய்வு முறைகளை கொண்டவை. அதில் நிகழ் பொழுதின் பதிவு, அகமகிழ்வு என்பதை முன்மொழிந்து படைப்பாளி, படைப்பு, பார்வையாளர் என்பனவற்றின் நெருக்கம் சார்ந்து, பயிற்சித்திறன், கதையாடல் தன்மைகளை விலகி, ‘அரூப ஓவியம்’ தனது அடையாளத்தை கொண்டுள்ளது.
(நேரில்/மனதில் கண்ட தோற்றங்களை வரையும் திறன் அவசியமில்லை என்பது அரூப ஓவியம் சார்ந்த புரிந்துணர்வு)
அரூபன், ரூபத், வடிவத் தோற்றங்களை ஒருங்கிணையப் பெற்றது ஓவியம். ஓவியங்களைப் பகுத்து ஆயும் முறையில் ‘உருவ ஓவியம்’ அரூப ஓவியம் என வகைப் படுத்தப்படுகிறது. எனவே, அரூப கூறுகள் (அ) அரூப ஓவியம் என்பதை இக்குழுவிற்கு அன்னியமல்ல.
உருவத் தோற்றங்களை ஓவியமாக்கும் ஓவியர்கள் அனைவரும் இக்குழுவில் இல்லை. அவ்வண்ணமே அரூப ஓவியர்களும் இல்லை எனலாம்.
உருவம் என்பதை பற்றிய கருத்தியலான துவக்கம். ஒவ்வொரு அங்கத்தினருக்கும் எந்த அகப்படைப்பிலிருந்து உந்துதல் பெற்றது-? அல்லது எதிலிருந்து?
உணர்வு அலைகள் பகிர்வதற்கு ஏதுவாக நேர் மற்றும் புனைவு வகை. காட்சித் தோற்றங்களை பெறுபவை. அனுபவ பகிர்தலாக எதை, யாருக்கு எவ்வகையில் என்ற கவனம் ஓவியத்தில் உருவ, வடிவ, அரூப தோற்றங்களைக் கட்டமைக்கின்றது.
பகுத்து அறிதல் என்பது தன், பொது என்ற அடையாளங்களை கொண்டது. பரவலாக அறியப்பட்ட அடையாளத்தை முன்வைத்து ஒரு நபரின் பிரத்யேக அனுபவம் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் பிறரால் அறியப்படுகிறது.
 ‘அம்மா’ என்ற வார்த்தையை கற்றது எப்படி? இக்கேள்விக்கான பதில் ஓவியத்தில் நேர்ந்த உருவத் தோற்றங்க-ளுக்கான உந்துதல், கருத்தியல் பெற்றமைக்கும் பொருந்தும்.

இக்குழு நபர்கள் கலைஞனாக வாழ முடிவு செய்தது ஏன்-? இதனால் வாழ்க்கையில் நேர்ந்த மாற்றங்கள் எத்தகையது?

நமக்கு நாமே ரகசியம். நிலைப்பும் நிலையாமையும் உந்து சக்தி, உறவும், தொழிலும் நமது முகவரிகள். யாவற்றிலும் உறவு காணும் முகமாய் தன்னை இழந்த தருணம் கோலாகலமானது. இவ்வனுபவம் அனைத்து செயல்பாடுகளுக்கும் அனைவ ருக்கும் பொது. அவ்வனுபவ வெளிப்பாடு (அ) பகிர்தல் படமெடுக்கும் பாம்பின் நாக்கில் முத்தமிடுவதாகவும் இருக்கலாம். அவ்வனுபவத்தை பாவனையாக்கி, படைப்பாக்கும் பாங்கில் ஒரு நபர் தன்னை கலைஞனாக அறிய, அறிவிக்க முற்படுகிறார். இதில் கலைஞன், கலை படைப்பு என்பன தொழில், உற்பத்தி, முகவரி என்றாகிறது.
பராபரமான உள்ளத்தைத் தன்னில் யாசிக்கும் நிலையில் ரிக்ஷா -ஓட்டுநர், ஓவியம் செய்பவர் இருவரும் கலைஞர்களே. சமூக அடையாளங்கள் வேறு வேறானவை.
வாழ்க்கைப் பயணத்தில் நபரின் நெருங்கிய உறவும், தொழிலும் (சமூக உறவும்) ஒன்றையொன்று சார்ந்தவை, ஒன்றையொன்று பிரதிபலிப்பவை. இவ்வகையில் கலைத் துறை சார்ந்தது எனது வாழ்க்கைப் பயணம்.
என்னை கிராமத்திலிருந்து அழைத்துவந்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்தவர்கள் ராஜா ரவிவர்மாக்கள். இக்கல்லூரி வளாகத்தில் ரூபன்ஸ்களும், பிக்காசோக் களும் தங்களின் அதிகாரப் பகிர்வு, விருது, வியாபாரம் குறித்து சமர்புரிவார்கள். கூடி ஐரோப்பா, இந்தியா, சென்னை, மரபு, நவீனம், உலகமயம் என ஜெபம் புரிவர். சுதந்திரம், தனித்துவம், புனிதம் என மூன்று முறை கூவிப் பிரிந்து செல்வர். இவர்கள் மத்தியில் எனக்கான அடையாளம் தேடிக்கொண்டிருந்தேன்.
எனது சினேகிதியின் மரணம் வாழ்க்கை, கலைத்துறை என்பவற்றை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியது. இரக்கமும் மூர்க்கமும் ஓவியத்தைப் பரிசோதனை களமாக்கியது. சக கலைஞர்களை கண்டு அசூசையும், பரிதாபமும் கொண்டேன். இவர்களோடு உலவுகிறேன் என்பது மட்டுமே என்னில் எச்சமாக இருந்தது.
எனது உடல் நலக்குறைவும், பெற்றோரின் கண்ணீரும், என்னை குடும்பஸ் தனாக்கியது. குழந்தைகளின் மூத்திரவாடை சதாகாலமும் எனது பெற்றோர் பாதங்களில் என் முகம் புதைத்தது. அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்லியபடியே கலைத்துறை மேல் சவாரி செய்தேன். பாலியல் உறவுகளில் நேர்ந்த அவஸ்தையும், பரஸ்பரமும், கலைத் துறை, மதம் சார்ந்த விசாரிப்பும், விமரிசனமுமாக எனது பதிவுகளைக் கண்டேன்.
கலைக் கல்லூரி, அரசு கலைத்துறை, கலை விற்பனைக் கூடங்கள், இவற்றை சிலாகிக்கும் விமரிசனங்களுக்கு வெளியே நடைபயிற்சி வழிகளில் கலை சேவையாக பட்டது. நகர்புறம், கிராமப்புறம், மலைப்பகுதி எனப் பல பகுதிகளும் ஓவிய முகாம்களாய் நிகழ்த்தினோம். பலதரப்பட்ட மக்களுக்கும் கலை பயிற்சி முகாம்கள் நிகழ்த்தினோம். அனைத்தும் அதனதன் இயல்பில் ஜீவிப்பதை உணர்ந்தேன். கலையும் வாழ்க்கையும் ஒன்றுக்குள் ஒன்று.

1960க்கு பிறகு கலை உலகிற்கு வரக்கூடிய கலைஞர்கள் அனைவரும் மேற்கத்திய கலை,இந்தியக் கலை, சென்னைக் கலைப்பாணி என்பது தெளிவாக புரிந்தபிறகு கலைஞர்களாக மாறியவர்கள்தான். இத்தரவுகளில் கருப்பு  அங்கத்தினர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்-?

கலை எல்லையற்றது...?
காட்சிப் பதிவு கருவிகளின் கண்டுபிடிப்புகளும் கலை பற்றிய கருத்துரு மாற்றங்களும் கலை, கலைக்காக, கலை மக்களுக்காக. அந்நியக்கலை மரபு, சுதேசிய கலைமரபு, மரபு கலை, நவீன கலை, கவின் கலையும் பிற ஊடகங்களும், சுய விசாரணை, மானிடம் அதிகார மையங்களும் படைப்பு சுதந்திரமும் இவ்வாறு பல தரவுகளில் விவாதித்து, கலை புரிதலாகி அவற்றை படைப்பாக்கி வழியில் கலைஞர்களாக அறியப் பட்டவர்கள் அநேகர். விரல்விட்டு எண்ண முடியாத அளவு.
உற்பத்திப் பொருள் அனைத்திற்கும் சந்தையும், விலையுமுண்டு. இதை கைக் கொள்ள தெரிந்தவர்கள் பிரபல்ய கலைஞர்களாக சமூகத்தில் பார்க்கிறார்கள் என்ற புரிதல் நம்மை தனிமைப்படுத்தி இயக்கியது. அது எந்த அனுபவங்களோடு தன்னை இணைத்துக் கொள்கிறது?
இக்குழு பல்வேறு கலைஞர்களைக் கொண்டது. இதில் தத்தமது தனித்துவத்தை இழக்காமல் குழுக்கான கூட்டு முயற்சி சாத்தியமா- எப்படி?
கயிறு இழுக்கும் விளையாட்டு. கூடி செயல்படும் இலக்கு குறித்து தெளிவும், நம்பிக்கையும், செயல்பாட்டில் உறுதியும் வேண்டும். ஒரு கயிறு அல்லது பல கயிறு கட்டி இழுத்தபோதும் ஒருவர் இழு திறன் மற்றவருக்கு கை மாறிவிடாது. இலக்கு வசப்படும்.
கூட்டாக செயல்படுவதில் ஒவ்வொருவரும் தத்தமது செயலில் தெளிவும், உறுதியும் வினையும், கருத்துப் பரவலில் என்பதாகும்.
தமிழக ஓவிய மரபில் நெருக்கம், துவக்கம், தொடர்பு  கிடையாது?
எங்கள் குடிசை வீட்டிற்குள் ரோப்பு நிறத்தில் ஏசுநாதரும் அவர் இருதயத்தில் சிறிய அளவில் கருகிய நிறத்தில் என் தாத்தா தலைவணங்கிய நிலையும் சலனமற்று இருந்தார்கள்.
எனது மனப்பாட பகுதியிலிருந்து ஐரோப்பிய பாலே டான்ஸ் மகளிர் அம்மணமாக எனது ஓவியங்களில் காட்சி அமர்ந்தது கண்டேன். கடந்துவந்த வழிகளும் அவ்வண்ணமே இருந்தன. கதை என்றால் “ஒரு ஊரில் ஒரு ராஜா” என்பது. வாழ்க்கை அனுபவம் கதை ஆகாது என நம்பிக் கொண்டிருந்த காலம்.
ரூபன்ஸ், ரெம்ராண்டுகளின் மகளிர் ரத்தமும் சதையுமாக ஆடுகிறார்கள். இந்தியர்கள் வார்ப்பு பொம்மைகளை அடுக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என ஊமைக் கலைஞர்கள் பலர் வாய் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அவர்கள் பார்த்ததை அச்சி அசலாக வரையத் தெரிந்தவர்கள் மற்றும் வரையத் தெரியாதவர்கள் (மார்டன் ஆர்டிஸ்டுகள்).
மேலும் நமது சாமி வகையறா, ஜாக்கெட் அணியாத பொம்பள, ஆம்பள வகையறாக்களை உள்வாங்கி டிஸ்டிராக்ஸ்சன், கியூபிசம், அப்ஸ்டிராக்ட் என மரபை நவீனமாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருப்பவர்கள். இவர்களையும், இவர்களது கலைப் படைப்புகளையும் புரிந்து அறிய நாமும் மரபுகலை வகைகளுக்குள் நுழைந்தோம்.
தமிழ் மரபு கலை படைப்புகளை பயிற்சி முறையாக நகல் செய்தோம். அவற்றிலான உள்ளடக்கம், காட்சி கட்டமைப்பு,  பயிற்சித் திறன் போன்றவை பகுத்து அறிந்தோம். அக்கலைப் படைப்புகள் மத அடையாளங்களை விலக்கி வாழ்வியலுக்கான யதார்த் தங்களை பேசின.
யாவற்றிலும் உறவுகாணும் பாங்கு காட்சி அமைப்பில் கோரம் தவிர்த்தல் போன்ற நுண்மங்கள் இன்றைய கலைப்போக்கின் அவசியமாகிறது என்பதை உணர்ந்தோம்.
இன்றைய கலைத் துறையில் மரபை நவீனமாக்கும் (பிளாஸ்டிக் மா இலை தயாரிப்பாளர்கள்) மேம்போக்கான போக்கையும், மத மூடநம்பிக்கையையும் விமர்சிக்கும் ஓவியங்களை செய்து வருகிறோம்.
இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கும் மேற்கண்ட பயிற்சி வகுப்புகளும் நிகழ்த்தி வருகிறோம்.
நான் எதை கலைத்துறையில் உருவாக்குகிறேன்?
கலை படைப்பு, மதம், மொழி, அரசு, இனக்குழு, விருது, விளம்பரம், வியாபாரம் அற்றது. கலைப் படைப்பாளி பட்டறிவாளன், சமூக முன்னோடி சுதந்திரமானவர். இக்கூற்றை உறுதியாக நம்புகிறேன்.
கொள்வதும் கொடுப்பதும் (வியாபாரம்) யதார்த்தம். இதில் உணவுப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி அல்ல. உழுது பயிர் செய்யும் விவசாயியாகவே கலைத் துறையில் என்னை பாவிக்கிறேன்.
புரவலர்கள், விருது வழங்கும் குழுக்கள், இடைத்தரகர்கள் (கலை பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கலை விமர்சகர்கள்) கலைத் துறையின் நல்மேய்ப்பர்களா? இதில் படைப்புச் சுதந்திரம் என்பது அறியாமையா? அறிந்தும் அறியாதவன்.
நிகழ்பொழுதின் அனுபவம் கலை, பாவித்தலும் அதன் பிரதி உற்பத்தியும் கலைப் படைப்பு, கலைப் படைப்பு புறவடிவம். அதனால் பெறப்படும் தூண்டல் அகவயமானது. இதை உணர்த்த கல்லில் ரதிதேவியை வடிக்க வேண்டுமா? சிறு மண்ணால் கட்டினால் போதாதா?
தடையற்ற மனோவயத்தை யாவரும் எந்த ஒரு செயலிலும் உணரலாம், உய்க்கலாம், பகிரலாம். இதை ஒரு ஓவியத்தின்மூலம் பகிர்வதற்குப் பயிற்சித்திறன் அவசியமா?
படைப்பாளி ரசனைக்குறியவர். ரசனைக்கு படைப்புத்திறன் தடையா? கலைஞன், கலைப் படைப்பு  என்பவை அதிகாரத்தில் அடையாளமா?
கலைக்கான கருத்துரு, கலைத்துறை, கலைப் படைப்பு, படைப்பாளி, சமூகம் இவற்றிற்கான முரண் இணக்கத்தைக் கவனிப்பதும் அவ்வப்போது நேரும் தீர்வுகளை எனது கலைப்படைப்புகளாக உருவாக்கி வருகிறேன்.
‘கருப்பு’ எதை உணர்த்துகிறது?
வெளி ஒளியுமல்ல, இருளுமல்ல. ஒளி கையிருப்பு எனில் இருள் விரிந்து பரந்த களம். கருமை - வண்ணம்/இனம்.
கருப்புக் குழுவின் அவசியம்?
கலைத்துறையில் எனது அனுபவத்தைப் பகிர்வதற்கும் சக கலைஞர்களோடு கூடி வெளிப்படுத்துவதற்கும் இக்குழு அவசியமாகிறது.
இக்கேள்விக்களுக்கான புதிய கலைப்படைப்புகளாக மாற்ற இயலுமா-?
கலை பற்றிய விசாரிப்பு என்பதே கலை படைப்பு. இதில் நம் மனத்தோன்றலை நேர்மையாக வெளிப்படுத்த மனஉறுதியும் தெளிவும் வேண்டும்.
இக்கூட்டுச் செயலில் நமது பங்களிப்பு?
கூடி உருவாக்கிய கருத்துருக்களைச் செயல் வடிவம் ஆக்க சாத்தியக் கூறுகளை ஆராய்தல், குழுவோடு இணைந்து செயல்படுதல்.