கவிதை: எ.ஜே. மித்ரா, இசையியல் ஆய்வாளர்,
தாம்பரம்
காதல் வயப்படும்
ஆண்
செம்மார்பு குக்குருவான்
பெண்
பறவைக்குப் பழத்தைக் கொடுக்க
பெற்றுக்
கொண்டால்... கூடும்
இல்லையெனில்
ஆண்
வேறு
பெண்ணைத் தேட வேண்டியதுதான்
ஆப்ரிக்க வானவில் பஞ்சுருட்டன்
நீர்நிலைகளின்
ஓரத்தில்
கிளைகளைக்
கொண்ட
குகையைத்
தோண்டும்
தன்
இனத்திற்கு மாத்திரமல்ல
மற்ற
இனங்களோடும் பகிர்ந்து கொள்ள
செந்தலைப் பூங்குருவி
அமைதியாகப்
பறக்கும்
ஆபத்து...
தொந்தரவு... வருமாயின்
அது, கடந்து செல்லும் வரை
ஆடாமல்
அசையாமல் உட்கார்ந்திருக்கும்
அமெரிக்க பாராடைஸ் தனஜெர்
கூடு
கட்டும் போது
ஆண்
பாட
பெண்
கூடு கட்டும்
வான் கோழி கழுகிற்கு
முகத்தில்
முடியே இருக்காது
விகாரமாகவும்
அவலட்சணமாகவும் தோன்றும்
ஆனால், உயரமாகப் பறக்கும்
உயர
பறக்க பறக்க... அழகோ அழகு.
அடியேனின் கன்னி முயற்சி..
பதிலளிநீக்குஇதையும் கவிதை என்று ஆமோதித்து
தனது மாத இதழில் இதழ் விரிக்க இடம் கொடுத்த
திரு .சி.முத்துகந்தன் அவர்களுக்கு
என் இதயம் சிந்தும் தேன் துளிகளை முத்தாக்கி
கணினி கொண்டு காணிக்கையாக்குகிறேன்...
நன்றி நவிலும்
மித்ரா