என். ஜெய்சிங், புகைப்படக்கலைஞர், மும்பை.

திருநங்கைகள் பணம்
பிடுங்கிகள், மோசமா னவர்கள் என்கிற பொதுபுத்தி எனக்கு இருந்தது.
வேலை நிமித்தம் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயில் பயணத்தின்போது ‘பட் பட்’ பட்டென கை தட்டும் ஓசை அடுத்த பெட்டியில்
கேட்கும்போதே, நான் பயணம் செய்த பெட்டியில் சலசலப்பு
ஏற்படுவதை பார்த்திருக் கிறேன். கீழே அமர்ந்திருக்கும் ஆண்கள் மேலே றிப்போக முற்படுவர்; போர்வை போர்த்திக் கொண்டு தூங்குவது
போல பாவனை செய்வர். நானும் நமக்கேன் வீண் வம்பு எனத் தூங்கு வதைப் போல்
நடித்திருக்கிறேன். சில சமயம் காசு கொடுத்திருக் கிறேன். திருநங்கைகள் யார்?
ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகிறோம்?
ஆணும் இன்றி பெண்ணும் இன்றி இருக்கும் இவர்களின் உடற்கூறு எப்படிப்பட்டது என்கிற தேடல்
எனக்குள் இருந்தது. விடைகளைத் தேடி கூவாகம்
திருவிழா விற்குச் சென்றேன். முதல் முறைக் கூவாகம் திருவிழாவிற்குச் சென்ற போது
என்னுடன் புகைப்படக் கருவியை எடுத்துச் சென்றிருந்தேன். சடங்குகள் நிறைந்த வண்ண மயமான
திருவிழாவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் புகைப்படங்கள் எடுக்கத்
தோன்றவில்லை.
அங்கு நான் கண்ட
திருநங்கைகளை அணுகிப் பேச விரும்பினேன். ஆனால், தயக்கம்
இருந்தது. பொதுபுத்தியின் காரணமாய் பல கேள்விகள், பயங்கள் என்னைத்தடுத்தன.
புகைப் படக் கருவியைப் பிடுங்கிக் கொள்வார்கள். காசைப் பிடுங்கிக் கொள்வார்கள்
என்பன போன்ற என் எண்ண ஓட்டம் அமைந்திருந்தது. தொடர்ந்து ஐந்து வருடங்கள் கூவாகம் திருவிழாவிற்குச்
சென்று கொண்டிருந்தேன்.
ஐந்தாவது வருடம், விழுப்புரம் சாலையில், ஓர் விடுதிக்கும் கீழ்
நின்றபடி, விடுதிக்குள் சென்று வந்தபடி இருந்த திருநங்கைகளையும், ஆட் களையும் தயங்கியபடி வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். மணி மதியம் பன்னிரெண்டு இருக்கும். அப்போது 25 வயதி லிருந்து முப்பது வயதுக்குள் இருந்த ஓர் அழகிய திருநங்கை என்னை வா
எனக் கூப்பிட்டார். எனக்குள் சற்று தைரியம் ஏற்பட்டது. என்னையும் அறியாது அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். இடதுபுறம் ஒரு மதுபானக் கடை இருந்தது. குறுகிய
சந்துபோல அமைந்திருந்த இடம் இருட்டாக இருந்தது. அறைக்கு வெளியே திருநங்கைகள்
சிறுசிறு குழுக் களாய் அரட்டை அடித்தபடி அமர்ந்திருந் தனர். சில அறைகளுக்குள்
தயாராகிக் கொண்டிருந்தனர். என்னை அழைத்துச்சென்ற திருநங்கை ஓர் அறைக்குள் சென்று
கதவைத் தாழிட்டார். என்னைக் கட்டிலில் அமரவைத்து உடைகளை நீக்கக் கூறினார். நான்
அவரை தடுத்து, “நான் புகைப்படம் எடுக்க வந்தேன்” எனத் தயங்கியபடி கூற, வெளியே
போ, என் தொழில கெடுக்காத” என்று
கோபாமாய் என்னை வெளியேற்றினார். அறைக்கு வெளியே நின்ற என்னை மற்றொரு திருநங்கை “ஏன் இவ்ளோ சீக்கிரம் வெளியே வந்துட்டீங்க” எனக்
கேட்டார். எதிர் அறைக்கு என்னை அழைத்தார். நான் விடுதியை விட்டு வெளியேறி நடக்கத்
தொடங்கினேன். அவனைப் போல நான் அழகா இல்லையா? அதனால ஓடறீங்களா எனக் கேட்கவும் எனக்கு ஓர் அறை
வாங்கியது போலிருந்தது. அந்த திருநங்கையின் அறைக்குள் சென்று அமர்ந்தேன். அங்கே
ஐந்தாறு திருநங்கைகள் அமர்ந்திருந்தனர். நடந்ததைக் கூறினேன்.
என் பெயர், ஊர் பற்றிக் கேட்டனர்.
அவர்களுடன்
சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திருநங்கைகள் ஒருவ ருக்கொருவர்
கண்களால் ஜாடை பேசிக் கொண்டி ருந்தனர். உரையாடலின் ஊடே, ஒவ்வொ ருவராய் அறையை விட்டு வெளியே றினர். எஞ்சியி ருந்தது நானும் என்னை
அறைக் குள் அழைத்த அந்த திருநங் கையும். திருநங்கை யின் உடலை முழுமை யாகப் பார்க்கவேண்டும்; புகைப்படம் எடுக்க வேண்டும்
என்னும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினேன். என்னை நிர்வாணமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சம்மதம் கூறினார். புடவை
மாற்றுவது போல், கட்டிலில் படுத்தபடி அரை நிர்வாணமாய் என பல
வகையான புகைப் படங்கள் எடுத்தேன். அந்த
நிகழ்வில் எனக்குள்ளே பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திருநங்கைகளின் உடல் கூறு பற்றிய ஆர்வத்தில்
கலந்திருந்த காமம் தேய்ந்து போனது. அன்று மாலை வரை அவர்களுடன் ஒன்றாய் உணவருந்தி,
தேநீர் குடித்து, பேசிக் கொண்டு, நேரம் செலவிட்டேன்.
திருநங்கைகள் பற்றி இச்சமூகம்
எனக்குக் கற்றுக் கொடுத்த தவறான எண்ணங்கள் மறைந்து, அந்த
அருகாமையும், அவர்கள் எனக்களித்த பாச மும் என்னை மனிதநேய முள்ளவனாய்
மாற்றின. திருநங்கைகள் தங்கள் உடலைக் கொண்டாட, ஏற்றுக் கொள்ள,
அவர்கள் உடலைப் பாராட்ட, சக மனிதராய் இச்சமூகத்தில்
வாழ, தங்களை ஏற்றுக்
கொள்ளும் மனிதர்களை எதிர் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள்.
மிகுந்த நம்பிக்கையுடனும், ஏக்கத்துடனும் அன்று மாலைவரை என்
புகைப் படக் கருவியைக் கையில் எடுக்காமல், அவர் களுடன்
நண்பனாய், சகதோழனாய் நேரத்தை செலவிட்டு, திருநங்கைகள் பற்றிய ஆழ்ந்த, புரிதலுடன்
விடுதியைவிட்டு வெளியே வந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக