முனுசாமிப் பேரன், பதுவஞ்சேரி, சென்னை.
கலை இலக்கியங்கிறதே பூடகமாகத்தானே சொல்ல வேண்டியிருக்கு என்றார் வெளிப்படையாக.
“....ஆமா... மௌனமா பேசினா அது வெறும் செய்தியா போகும்” என்றார் அழுத்தி.
“இதுவர, ஆறு டீ... பன்னென்டு கீர
வட”
“எவ்ளோ... அ.... சொல்லுங்க... எவ்ளோ பாஸ்...”
“தோலுவாய(ன்) போனானா(ம்)
தொன்னவாய(ன்) மூட்டப் பொண்ண கேக்க”
மொத்தம் நூத்திஎட்டு என்றார், டீ கடைக்காரர்.
---------
“மார்க்ஸ்... ஸ்டாலின் வாசிங்க”
“சரி”
“லியோ டால்ஸ்டாய்... கார்க்கி வாசிங்க”
“சரி”
“பிக்காசோ... வான்கா வாசிங்க”
“சரி”
“டே ய் நீ என்னடா எல்லாத்துக்கும்
சரி சரின்னு தலையாட்டுற!
உங்க ஆத்தா உன்னய பெத்தாளா பேண்டாளாடா!”
“இல்ல
மச்சி என்னய பீசிட்டா...டா”
------------
படம் 1 : தோழா என் பின்னே வருகிறவர்கள்...
என்னைக் காட்டிலும் பெரிய
காரியங்களைச் செய்வார்கள்
படம் 2 : இல்ல தோழா! அப்படி யாரும் வந்த மாதிரி தெரியலியே
படம் 1 : சரி தோழா, “அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை”
(படங்களை நோக்கி இருவர் கோட் சூட் போட்டு வருகிறார்கள்)
ஒருவர் : “இதுக்கு ஒரு லட்சம். அதுக்கு ஒரு பத்தாயிரம்...
இதுக்கு மேலே வாங்கித்
தர முடியாது”
படம் 1& 2 : ஆமா தோழா! நாம புத்தர் படமா இருந்தா அதிக வெலக்கி போயிருப்போம்.
---------
மைய அரசியல், நுண் அரசியல் என்று பேசி பேசி தேநீர் இழுத்தார். அவரிடம் காலையிலிருந்து
பூமி பார்த்தீர்களா? என்றேன். குறிப்பாக இந்தத் திராவிட
கட்சிகளால்தான் தமிழினமே வீழ்ந்தது என்று தேநீர் முடித்தார். மீண்டும் அவரிடம் சரி
வானம் பார்த்தீர்களா? என்றேன். பதில் சொல்லாததனால்... நான் சிறுவர்கள் விளையாடும் கோலியாட்டத்தைப்
பார்த்தேன். ஒரு
கால் முட்டியின் மேல் மறுகால் அழுத்தி... முகத்தில் மூக்கு புடைக்க மையம் குவித்து
எதிரே இருபதடி தூரத்திலுள்ள மற்றொரு கோலிகுண்டை லொட்டக் கையன் சரவணன் அடித்தான்.
குறி பார்த்து அடித்த அந்த அடியில் இருக்கிறது நுண் அரசியல்.
--------
குரு : பூவைப் பார்த்தாலும்... நாயைப் பார்த்தாலும்... மகிழ்ச்சி உண்டாகும்...
பொழுது
சொல்கிறது
சீடர் : அப்புடியா
குரு : ஆனால் விருது,
விளம்பரம், வியாபாரம்... இவைதான் தீர்மானிக்கிறது!!!!!!
இது
படைப்பு... இவர் படைப்பாளர்.
சீடர் : யாடியுப்அ!
----------
சில நாட்களில்
மரம் முழுக்க வெள்ளைப் பூக்களால் நிறைந்திருக்கும். நெளியாமல் தொங்கும் பச்சை மண் புழு போல
பூக்களில் சில குட்டிப் பிஞ்சுகள் துளிர்க்கும். அந்த
முருகமரத்துப் பூவில் தேன் குடிக்கும் தேன்சிட்டு! கிளையில் இலையில்
உட்காராமல் படபடத்துப் பறந்துகொண்டே ஒரு நொடிப் பொழுதில் பறக்காமல் அந்தரத்தில்
மிதந்து தேன் இழுக்கும்... நான்கு பேர் சேர்ந்து பிடிக்கும்
அடர்ந்த உயரமான வேப்ப மரம். அதில் சண்டை போட்டுக்கொண்ட
காகங்கள் இரண்டு. கடித்து அடித்து கடித்துக் கொண்டே பனம்பழம்
போல கீழே விழப் பார்த்து! பூமிக்கு இரண்டடி, மூன்றடி உயரத்தில் ஒரு நொடிப் பொழுதில் பிரிந்து! படபடத்துப் பறந்து செல்லும்... எதிர்பாராத விதமாய் ‘டமார்’
என சத்தம். இரண்டு வண்டிகள் மோதி பெரும்
விபத்து. அருகே செல்வதற்கு முன் ஆம்புலன்ஸ் தூக்கிக்கொண்டு போனது. அந்தச் சப்தத்தின்
படபடப்பு ஆணா, பெண்ணா? மதம் சாதி?
யாவும் மறந்து உள்ளுக்குள் சிறு நடுக்கத்துடன் அந்தப் படபடப்பு. பறக்காமல் மிதந்த தேன்சிட்டின்
படபடப்பு. பிரிந்து பறந்த காக்கையின் படபடப்பு. முகமறியாத நபர் மேல் கொண்ட
படபடப்பு. இவையெல்லாம் ஒன்றா வேறா?
---------
அரூபம் (எழுத்து/ ஓவியம்)
நாளகனெனள
ய்ணளடிஅர்
பேஓஊடீ
ய்ஊஆறு
ஓநுளுதுனு
ய்ட்டுஆளுனு
டடாடாடுடூடை
அரூபம் நன்றாக விளங்கியது.
“மனித
உறவுகளை நேசிக்கிறதும்.
நேசித்த
உறவுகளைச் செழுமைப்படுத்திக் கொள்வதும்... அப்படி!
செழுமைப்
படுத்திக்கொண்ட உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வதுமே
மானுடப்பண்பு”
“யப்பா
அத விடு..
தர்மபுரி
இளவரசன் செத்தது,
கொலையா?
தற்கொலையா?”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக