கவிதை: -முனைவர் ஜே.ஜெகத்ரட்சகன் பேராசிரியர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்.
உடல் பருத்து நாக்கு தடித்த நாயது.
நாய்க்கேற்ற குணங்கள் அதனிடமில்லை
ஆனாலும் அது நாய்தான்.
அவ்வபோது குரல் மாற்றும்
குரைக்கும் தொனி மாற்றும்
வேறுபட்ட நாயென
தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும்.
எளிதில் நிறம் மாறும்
யாரையும் நம்பும்; நம்ப வைக்கும்
ஏமாறும், ஏமாற்றும்
ஒப்பனை, ஒத்திகை
முன்னேற்பாடுகள் ஏதுமின்றி
இயல்பாக நடிக்கும்.
முச்சந்தி, முன்பின் தெரியாதவர்
பசையுள்ளவர் பெரியவர்
தன்னிலும் சிறியவர் என யாரிடத்தும்
அர்த்தமற்ற பிதற்றலைக்
கூச்சமின்றி உரக்கக் கூறி
பாராட்டுகளுக்காய் ஏங்கி நிற்கும்.
உன்னதத்தின் உச்சிமுனை
தன் குறிக்கோளெனக் கூறி
பலர் எச்சிலாக்கிக் கழித்துக்கட்டிய
மண்கூடி நிறம் மாறிய
எலும்புக்கு நாவூறி நிற்கும்
எதிர்பார்த்து மட்டுமல்ல
எதிரியாய்ப் பார்த்தும் வாலாட்டும்
தின்னதைக் கக்கும்
கக்கினதைத் தின்னும்
நம்புங்கள் நிச்சயமாக
அது நாயே தான்.
உடல் பருத்து நாக்கு தடித்த நாயது.
நாய்க்கேற்ற குணங்கள் அதனிடமில்லை
ஆனாலும் அது நாய்தான்.
அவ்வபோது குரல் மாற்றும்
குரைக்கும் தொனி மாற்றும்
வேறுபட்ட நாயென
தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும்.
எளிதில் நிறம் மாறும்
யாரையும் நம்பும்; நம்ப வைக்கும்
ஏமாறும், ஏமாற்றும்
ஒப்பனை, ஒத்திகை
முன்னேற்பாடுகள் ஏதுமின்றி
இயல்பாக நடிக்கும்.
முச்சந்தி, முன்பின் தெரியாதவர்
பசையுள்ளவர் பெரியவர்
தன்னிலும் சிறியவர் என யாரிடத்தும்
அர்த்தமற்ற பிதற்றலைக்
கூச்சமின்றி உரக்கக் கூறி
பாராட்டுகளுக்காய் ஏங்கி நிற்கும்.
உன்னதத்தின் உச்சிமுனை
தன் குறிக்கோளெனக் கூறி
பலர் எச்சிலாக்கிக் கழித்துக்கட்டிய
மண்கூடி நிறம் மாறிய
எலும்புக்கு நாவூறி நிற்கும்
எதிர்பார்த்து மட்டுமல்ல
எதிரியாய்ப் பார்த்தும் வாலாட்டும்
தின்னதைக் கக்கும்
கக்கினதைத் தின்னும்
நம்புங்கள் நிச்சயமாக
அது நாயே தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக