கட்டுரை ஆசிரியர் : சந்ரு
வாயில் அசை போட்டுக்கொண்டு எழுதுவது, வயது வேறுபாடு இல்லாமல் போவது, எதைப்பார்த்தாலும் சிரிப்பது,
கபடு இல்லாமல் குறிப்பான ஒன்றை பாவிப்பது, மன தோற்றமாக்குவது,
பயணத்தில் எந்தக் குறையும் தோனாது வழியனுப்புவது, வரவேற்பது...
கை நீட்டினேன் அவரும் கை நீட்டினார். ஒருவர் கையை ஒருவர் பற்றினோம். அந்தக் காலைப்பொழுதில்
எனது நண்பனும் நானும் ஓடிக்கலைத்து வேர்த்து விருவிருக்க புல்வெளியில் அமர்ந்து,
ஏது மில்லாமல் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் புன்னகைப்பதாய் இருந்தது.
இதை எழுதும் போதுதான் நினைவு கூறுகிறேன். இத்தனை
கால சந்திப்பில் பெருமாள் ஐயாவிற்குக் கை கொடுத்தது இதுதான் முதல் முறை. ஒரு வருடத்திற்கு மேலாக படுத்தப் படுக்கையாய் இருக்கிறார். அவரது மார்பிலிருந்து பக்கவாட்டாக செய்தித்தாள்கள் புரண்டு கிடக்கின்றன.
அவருக்குக் கை நோகும் என்று எனது நாற்காலியில் அமர்ந்தேன். தெருவிலிருந்து அவரது வீட்டு வளாகத்தில் வீட்டு கதவை திறந்ததும்
இடப்புறமாக பெரிய மேஜைக்கு அடுத்த நாற்காலியில், நீண்ட தாடி,
மீசை, தலைமுடி சகிதமாய் வெற்று மார்பின் குறுக்கே
ஒரு நீண்ட துண்டை போட்டு அமர்ந்திருப்பார். இது கடந்த இருபத்தி
ஐந்து காலடையாளம்.
சராசரி ஒரு கண் போன்று வட்டமான பிளாஸ்டிக் பொருள், அது பேனா மேடையாக இருக்கலாம். அதைப்
பெருமாள் அய்யா மேஜையில் பார்த்தேனா என்பது இங்கு முக்கியமில்லை. அது நேற்று மாலை அவரை சந்தித்தது குறித்த நினைவில் வந்து போகிறது. இப்பொழுது அவரை படுக்கை அறையில் பார்க்கிறேன். நீண்ட
தாடி, மீசை, தலைமுடி எல்லாம் நன்றாக மழுங்க
மழித்திருக்கிறது. என்னைக் கண்டதும் அவரது முக மலர்ச்சி கடந்தகால
அடையாளத்தில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை.
பெருமாள் அய்யாவின் மூத்த
மகன் அவரது கால்மாட்டில் அமர்கிறான். மகன்,
“அப்பா... உங்க குல தெய்வம் சொரிமுத்து
ஐயனார் கோவிலில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கலை முகாமிற்கு நான் போய் வரட்டுமா?”
பெருமாள்.... “போயிட்டு வா”
மகன்... “சார்... எங்க அப்பா வணிக செட்டி, எண்ணெய் வியாபாரம். குலதெய்வம் துடியான சொரிமுத்து ஐயனார்.”
பெருமாள்... “என் பாட்டியோட பாட்டி
சார். அந்த நான்கு தலைமுறையா ஐயனார்தான் எங்க குலதெய்வம்.
அதுக்கு முன்பா ‘முப்பிடாதி அம்மன்’. சொரிமுத்து ஐயனார் கோவில் சிங்கம்பட்டி ஜமீனுடையது. அவங்க
தேவர்மார். அது அவங்க தெய்வம்தான். ஆனால்
நாடார் அது இதுவென்று பல சாதிகளும் ஐயனாரை வணங்கு கிறார்கள்.”
என்னை வணங்கிய கையை மெதுவாக தன் மார்பில் சாய்த்துக் கொண்டார்.
மகன்... “நம்ம கோவிலில் ஐயர்
பூஜை பண்ணக்கூடாது என்று ஐயரை போட்டு தள்ளிவிட்டார்கள் என்று சொன்னீர்களே”
பெருமாள்... “அதுவா... அது அந்தக்காலம்”
சில நொடிகள் பெருமாள் அய்யாவும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடி மௌனமாய்
இருந்தோம்.
பெருமாள்... “ஆயிரத்து தொள்ளாயிரத்து
இருபத்தி ஏழில் பிறந்தேன். இந்த இருபதாம் தேதி எனக்கு எண்பத்தி
ஏழுவயது முடிந்தது. நான் பிறந்ததற்கு பின் குடும்பத்தில் இன்னும்
செல்வம் வளர்ந்தது. பன்னிரெண்டு ஏக்கர் தோப்பு, உட்கார்ந்து வேலைப்பார்க்க எண்ணெய்க் கடை, தோட்டம்,
துரவு என பெரியவர்கள் நிறைய சம்பாதித்து வைத்தார்கள். நல்ல வசதி”
மரத்துப்போன தந்தையின் கால்களைப் பிடித்துக்கொண்டு, சிரித்தபடி மகன், “பெரியவர்கள் சேர்த்து
வைத்ததை இவர் சினிமா ஹீரோ நினைப்பில் எல்லா வற்றையும் அழித்தார்... என்னங்கப்பா”
தந்தையும் மகனும் சேர்ந்து சிரித்தார்கள். நானும் அதில்.
பெருமாள்... “ஒரு அண்ணன் அவரும்
மிலிடெரியில் இறந்து போனார். மற்றவர் பெண்கள். நான் கடைசி பையன். என்னை எல்லோரும் செல்லமாக வைத்துக்
கொள்வார்கள்”
மகன்... “சரி... அப்பா உங்களை இவள் நல்லா பார்த்துக் கொள்கிறாளா?”
பெருமாள்... “எப்போதாவது வந்து எட்டி பார்த்துவிட்டுப் போவான்”
மகன்... “எப்பா... நான் உங்க பேரனைப் பற்றி கேட்கவில்லை..
இவா.. இவா...”
பெருமாள்... “சரி இல்ல, அவளுக்கு பணம் கொடுப்பது விரயம்”.
மகன்... “எப்பா... நான் நர்சப்பத்திக் கேட்கள.. உங்க மருமகளப்பத்திக் கேட்கிறேன்... இவ.. நல்லா கவனித்துக் கொள்கிறாளா?”
பெருமாள்... “அவதான் என்னை கவனிக்கிறாள். எல்லாமே அவள்தான்”.
சிறிது மௌனம். என்னைப் பார்த்து எதையோ சொல்ல நினைக்கிறார். அவரது பற்கள்
நெரியும் சத்தம் கேட்கிறது. ஆரம்பத்திலிருந்து பேசும்போது பற்கள்
நரநரக்கும் சத்தம் வருகிறது.
பெருமாள்... “என் பிறந்த நாளைக்கு சட்டையும், பட்டு வேட்டியும் எடுத்து
கொடுத்தான். அவர்கள் ரெண்டு பேரும் என்னை தூக்கி உட்காரவைத்து
அந்த சட்டையை போட்டு விட்டார்கள். ஒரு பத்து நிமிடத்தில் கழற்றிவிடச்
சொல்லி விட்டேன். சட்டை போட முடியவில்லை. அன்றைக்கும் எப்போதும் போல் கொஞ்சம் சரக்கு சாப்பிட்டிருந்தேன். மதியம் பாத்ரூம் போய்விட்டு, எழுந்து நின்றேன்.
தலை சுற்றுவது போல் இருந்தது. கீழே விழுந்து இடுப்பில்
இருக்கும் கால் எலும்பு முறிந்துவிட்டது. ஆப்ரேசன் முடிந்து வீட்டுக்குவந்து
நானாக எழுந்து நின்றேன். பிறகும் ஒருமுறை விழுந்தேன்.
பின்பு எழுந்துகொள்ளவே இல்லை. ஒரு வருடத்திற்கு
மேல் ஆகிறது. அப்படி, இப்படி புறண்டு படுக்க
முடியவில்லை. வாத நோய் இல்லை என்றாலும் கால் விளங்கவில்லை.
சாகும்வரை வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தால் போதும் என்று
நினைத்தேன். விதி நம்மை, படுத்த படுக்கையாக்கிவிட்டது. விதி... விதிக்கு முன் நாம என்ன செய்ய முடியும். எது எப்படியோ
அது நடக்கட்டும் காத்திருப்போம்.”
நேற்று அவரைப் பார்தது முதல் இதை எழுதும் வேளையிலும் அகமகிழ்வில் எந்த
மாற்றமும் இல்லை. அனைவரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு
செல்லும் முன், வாசலை நோக்கி நடந்தபடி பெருமாள் அய்யா மருமகளை
எனது மகள் என்று வாழ்த்தினேன்...சர்க்கஸ் விளையாடுவதும்,
அதை வேடிக்கைப் பார்ப்பதும் நாமாக...
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக